கொரோனா வைரஸ்: Coronavirus
கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும்.
சீனாவின் வூகான் நகரத்தில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டு உலகின் பல்வேறு பகுதிக்கும் பரவியுள்ளது.இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் முழுமையான விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்:
- காய்ச்சல்(Fever)
- இருமல்(Cough)
- உடல் சோர்வு(Tiredness)
- மூச்சுத்திணறல்(Difficulty in Breathing)
- தலைவலி(Headache)
கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:
நோய் அறிகுறிகள் கொண்ட நபர் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது.
மேலும் அந்த கிருமிகள் படிந்துள்ள நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களைத்
தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது.
சிகிச்சைகள் :
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
இளநீர், கஞ்சி, ஓ ஆர் எஸ் போன்ற நீர்ச்சத்து மிக்க உணவு வகைகளையும் , நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இஞ்சி, மிளகு, பழங்கள், காய்கள் போன்ற உணவு வகைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோய் தடுப்பு நடவடிக்கைகள்:
- அடிக்கடி கைகளை நன்கு சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.
- ஒருவர் மற்றொருவரிடம் பேசும்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பேச வேண்டும்.
- மருந்து கண்டுபிடிக்கும்வரை வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
Leave a Reply