எந்த ஒரு வியாபாரத்திற்கும் சந்தைப்படுத்தல்(Marketing) என்பது இன்றியமையாத செயல் ஆகும். சந்தைப்படுத்தும் முறை மட்டும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மாறுபடும். ஆனால் எந்த முறை பெரிய அளவில் லாபம்(Profit) பெற்றுத்தரும் என்பது அனைத்து முறைகளையும் பின்பிற்றியவர்கள் மட்டுமே நன்றாக அறிவர். பல்வேறு தொழில் முனைவோர்கள்(Entrepreneurs), நிறுவனர்கள்(Owners) மற்றும் சந்தைப்படுத்துபவர்களிடம்(Marketers) உரையாடியவர்கள் என்ற முறையில் பிரபலமான சந்தைப்படுத்தும் முறைகளின் நன்மை மற்றும் குறைபாடுகளை (Pros & Cons) தொகுத்துள்ளோம். அவைகள் பின்வருமாறு:
பாரம்பரிய சந்தைப்படுத்தல்(Traditional Marketing) :
பாரம்பரிய சந்தைப்படுத்தல் காலம் காலமாக பின்பற்றப்படும் ஆஃப்லைன்(Offline) முறை ஆகும். பெரும்பாலும் பாரம்பரிய சந்தைப்படுத்தல் பின்வரும் வழிமுறைகளில் பின்பற்றப்படுகிறது:
- அச்சு – Print (இதழ்கள் – Magazines, செய்தித்தாள்கள் – Newspapers மற்றும் பல)
- ஒளிபரப்பு – Broadcast(தொலைக்காட்சி – TV, வானொலி – Radio மற்றும் பல)
- நேரடி மெயில் – Direct Mail(பட்டியல்கள் – Catalogues, தபால் அட்டைகள் – மற்றும் பல)
- தொலைபேசி – Telephone (தொலைபேசி அழைப்புகள் – Tele Calls, குறுந்தகவல் செய்திகள் – SMS மற்றும் பல)
- வெளிப்புற சந்தைப்படுத்தும் செயல்கள் – Outdoor (விளம்பர பலகைகள் – Billboards மற்றும் பல)
பாரம்பரிய சந்தைப்படுத்தலின் பயன்கள்(Advantages of Traditional Marketing):
- உள்ளூர் நுகர்வோர்களை விரைவில் கவர முடியும்(Easy to reach Local Audience):
வானொலி மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வதன் மூலம் உள்ளோர் வாடிக்கையாளர்களை விரைவில் கவரலாம். சாலையோரங்களில் வைக்கப்படும் விளம்பர பதாகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தினை ஈர்க்கும் பெரும் காரணிகளாக உள்ளன.
- அச்சுப்பிரதிகளை சேமித்து வைக்க முடியும்(We can Store Hard Copies):
வாடிக்கையாளர்கள் விளம்பர அச்சுப்பிரதிகளை சேமித்து வைத்து தேவைப்படும் நேரங்களில் மீண்டும் பார்த்து பயன்படுத்த இயலும்.
- விரைவில் புரிந்து கொள்ள முடியும்(Easy to Understand):
தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியே செய்யப்படும் விளம்பரங்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுவதால் இவ்வகை விளம்பரங்கள் தவிர்க்க இயலாத செயல்பாடாக உள்ளது
பாரம்பரிய சந்தைப்படுத்தலின் குறைபாடுகள்(Disadvantages of Traditional Marketing):
- குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களை மட்டுமே சென்றடைய முடியும்(Less Audience Reach):
இவ்வகை சந்தைப்படுத்தல் மிக குறுகிய நுகர்வோர் வட்டத்தையே சென்றடையும் நிலை உள்ளது. அதிக அளவிலான மனித உழைப்பும் நேரமும் தேவைப்படுவதால் பாரம்பரிய சந்தைப்படுத்தல் மூலம் சிறிய அளவிலான நுகர்வோர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும்.
- செலவீனங்கள் மீதான வருமானத்தை கணக்கிடுதல் மிகவும் கடினம்(Difficult to Measure the ROI):
யார் எந்த விளம்பரங்களை பார்த்து சேவையை/தயாரிப்புகளை வாங்குகிறார்கள் என்பதை அறிதல் கடினம் என்பதால் இம்முறையில் செலவீனங்கள் மீதான வருமானத்தை கணக்கிடுதலும் கடினமாகவே உள்ளது.
- சந்தைப்படுத்தலுக்கான செலவு அதிகம்(Marketing Cost is High):
இவ்வகை சந்தைப்படுத்தலுக்கான செலவு மிக அதிகம் தேவைப்படுகிறது. தொலைக்காட்சி மற்றும் வானொலியில் விளம்பரம் செய்வதற்கான செலவு சற்றே அதிகம். சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் நிதி செலவிடும் நிலையும் உள்ளது.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல்(Digital Marketing):
இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிப்புக்களையோ அல்லது சேவைகளையோ இணைய பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் சந்தைப்படுத்தல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகும்.
இணைய சந்தைப்படுத்தலின் பயன்கள்(Benefits of Digital Marketing):
- அதிக அளவிலான நுகர்வோர்களை சென்றடைய முடியும்(Can reach More Audience):
இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், அனைத்து நாடுகளிலும் இணைய சேவை தடையின்றி கிடைப்பதாலும் உலகளவிலான நுகர்வோர்களை எளிதில் சென்றடைய முடியும்.
- நுகர்வோர் ஈடுபாடு அதிகம்(Consumer Interest):
சமூக வலைத்தளங்கள், உடனடி அரட்டை வசதிகள் போன்ற விடயங்கள் நுகர்வோரின் ஈடுபாட்டினை அதிகரிக்கின்றன. தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் நுகர்வோர் நேரடியாக உரையாடும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
- சந்தைப்படுத்தலுக்கான செலவு குறைவு(Less Marketing Budget):
சந்தைப்படுத்துவோரின் எண்னிக்கை குறைவான அளவில் இருந்தால் கூட எளிதில் நுகர்வோர்களை சென்றைடையும் வாய்ப்புகள் உள்ளதால் செலவும் குறையவே செய்கிறது.
- உடனடியாக நுகர்வோர்களை சென்றடைய முடியும்(Easy to Reach the Consumer in Short Span of Time):
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் பதிவுகள், இணைய விளம்பரங்கள் உடனடியாக நுகர்வோரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே உடனடி விற்பனை நடக்கும் வாய்ப்புகளும் அதிகம்.
- செலவீனங்கள் மீதான வருமானத்தை கணக்கிடுதல் எளிது(Easy to Measure the ROI):
பகுப்பாய்வு கருவிகள் பல்வேறு தகவல்களை கண்டறிய உதவுகின்றன. எவ்வளவு வாடிக்கையாளர்கள் வலைத்தளத்திற்கு வந்துள்ளனர், எத்தனை பேர் தயாரிப்புக்களை வாங்கியுள்ளனர் போன்ற விடயங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே செய்த செலவீனங்கள் மீதான வருமானத்தை கணக்கிடுதல் மிகவும் எளிதாகிறது.
- பிராண்ட் கட்டமைப்பு(Brand Building):
சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட, சிறந்த உள்ளடக்கம் கொண்ட வலைத்தளங்கள் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் வல்லமை கொண்டது. சமூக வலைத்தளங்களில் நுட்பமாக பதிவிடப்படும் காணொளிகள் மற்றும் பதிவுகள் பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரணிகளாய் விளங்குகின்றன.
இணைய சந்தைப்படுத்தலின் குறைபாடுகள்(Disadvantages of Digital Marketing):
- எதிர்மறை கருத்துக்கள்(Negative Reviews):
திருப்தியடையாத வாடிக்கையாளர்கள் தங்களின் எதிர்மறை கருத்துக்களையும் புகார்களையும் பொதுவெளியில் பதிவிடும் சூழல் உள்ளது. எனவே வியாபாரத்தின் மீதான நம்பிக்கை குறையும் வாய்ப்புகள் உள்ளது.
- நிபுணத்துவம் பெற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்(Need to Hire Specialists):
இணையத்தில் சந்தைப்படுத்துவதற்கு நிபுணத்துவம் பெற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். சில நேரங்களில் தவறிவிடும் சூழல்களும் உள்ளது.
- தேடல் பொறிகளின் கட்டுப்பாடுகள்(Search Engine’s Algorithm Updates):
பயனர்களுக்கு மிகச்சரியான முடிவினை அளிக்கும் நோக்கில் தேடல் பொறிகள் அடிக்கடி தங்களின் இயங்குமுறைகளை மாற்றி வருகின்றன. எனவே அடிக்கடி தேடல் பொறிகளின் இயங்குமுறைகளை கற்றறிய வேண்டியது அவசியமாகிறது.
எந்த முறையை தேர்ந்தெடுப்பது(Which One is Right for Your Business)?
இரண்டு முறைகளின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை அறிந்து கொண்டாயிற்றா? எந்த முறையை பின்பற்ற போகிறீர்கள்?
மிக சரியான முறையை தேர்ந்தெடுப்பதற்கு தங்களின் வியாபாரத்தைப்பற்றியும் நுகர்வோர்களைப்பற்றியும் நன்றாக தெரிந்து வைத்திருத்தல் மிக அவசியம். இரண்டு சந்தைப்படுத்தும் முறைகளும் தங்கள் வியாபாரத்தை எந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை அறிந்து வைத்திருத்தலும் மிக அவசியம். தங்களின் நுகர்வோர் இணைய வசதிகளை பயன்படுத்துவது குறைவு எனில் பாரம்பரிய சந்தைப்படுத்தலை தேர்ந்தெடுக்கலாம். நுகர்வோர் இணையத்தில் கட்டுண்டு இருப்பின் இணைய சந்தைப்படுதலை தேர்ந்தெடுக்கலாம். சில நேரங்களில் இரண்டு முறைகளையும் பின்பற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். எனவே தேர்ந்தெடுக்கும் முடிவு தங்களின் கைகளில் உள்ளது.
Leave a Reply