அதிகளவில் கேட்கப்படும் சமூக வலைத்தள சந்தைப்படுத்தல் தொடர்பான கேள்வி மற்றும் பதில்கள்:
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பெருகி வருகின்ற காரணத்தினால் சமூக வலைத்தள ஆய்வாளர் மற்றும் சமூக வலைத்தள மேலாளர் போன்ற பணிகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
எனவே சமூக வலைத்தள மேலாண்மையில் பணியை தேர்ந்தெடுக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் நேர்முகத் தேர்வில் அதிகளவில் கேட்கப்படும் கேள்விகளைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
- எந்த மாதிரியான ஆன்லைன் சமூகங்களை முன்பு மேலாண்மை செய்திருக்கிறீர்கள்?
- எங்களின் வணிகத்திற்கு எந்த சமூக வலைத்தளங்களை சிபாரிசு செய்வீர்கள்? ஏன்?
- ஒவ்வொரு சமூக வலைத்தள கணக்குகளிலும் எந்த மாதிரியான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்? அதன் வெற்றி எவ்வாறு இருக்கும்?
- வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்கு எந்த மாதிரியான உத்திகளை கையாளுகிறீர்கள்?
- தேடுபொறி உகப்பாக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களுடனான தொடர்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
- என்னென்ன சமூக வலைத்தள கருவிகளை பயன்படுத்துகிறீர்கள்?
- சமூக வலைத்தளங்களில் செலவீனங்கள் மீதான வருமானத்தை கணக்கிடுவதற்கு என்னென்ன அளவீடுகள் உள்ளன?
- சமூக வலைத்தளங்களில் எதிர்மறை கருத்துக்களை எவ்வாறு எதிர்கொள்ளுகிறீர்கள்?
- சமூக வலைத்தள மேலாண்மையில் தங்களின் மிகப்பெரிய தோல்வி என்ன?
- சமூக வலைத்தள மேம்பாடு மற்றும் புதிய விடயங்களை எவ்வாறு கற்றறிகிறீர்கள்?
- கூகிள்+ பற்றி தங்களின் கருத்து என்ன?
- தங்கள் மேலாண்மை செய்த சமூக வலைத்தள பணிகளில் ஏதேனும் உதாரணம் காமிக்க இயலுமா?
- எங்களுக்கான சமூக வலைத்தள பட்ஜெட் எவ்வளவு நிர்ணயிப்பீர்கள் ?
- எங்களுடைய தொழில்முறை போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?
- சமூக வலைத்தள மேலாளரின் அதிமுக்கிய பணி என்ன?
- ஒரு கதை சொல்லவும்
- எந்த நேரங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும் ?
- ஹாஷ்டாக் என்றால் என்ன? எத்தனை ஹாஷ்டாக் ஒரு பதிவில் உபயோகிக்கலாம்?
- எந்த மாதிரியான பதிவுகள் அதிக ஈடுபாட்டினை அதிகரிக்கும்?
- சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர் சேவை செய்வதின் அவசியம் என்ன?
தங்களின் பதில்களை கருத்துப்பெட்டியில் பதிவிடவும். சரியான பதில்களை விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
Leave a Reply