டிஜிட்டல் (அல்லது) இணைய சந்தைப்படுத்தல்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தயாரிப்புக்களையோ(Products) அல்லது சேவைகளையோ(Services) இணைய தொழில்நுட்பங்களை(Digital Technologies) பயன்படுத்தி இணையம்(Internet) வழியாக சந்தைப்படுத்தும்(Marketing) செயல்முறை ஆகும்.
சந்தைப்படுத்தலில் இணைய உலகின் தாக்கங்கள் – The implications of a digital world for marketing
வளர்ந்து வரும் இணைய தொழில்நுட்பங்களால் சந்தைப்படுத்தலில் பல்வேறு வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சில:
- பெரிய அளவில் நிதியை கையாள முடிந்த நிறுவனங்கள்(Enterprises) மட்டுமே அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கவர முடிந்த சூழல் மாறியுள்ளது. குறைந்த செலவில்(Minimum Investment) பரந்த வாடிக்கையாளர்களை(Maximum Reach) சென்றடைய பல்வேறு நுட்பங்கள் கண்டறியப்பட்டன.
- தரவுகளைக்கொண்டு(Data) முதலீட்டின் மீதான வருமானத்தை(ROI) துல்லியமாக கணக்கிட முடியும் என்ற சூழல் உருவானது.
- சிறந்த தயாரிப்புக்களை(Products) ஏற்கனவே பயன்படுத்திய பயனர்களின் கருத்துக்கள்(User Feedback) மூலம் பகுத்தறிய முடியும் என்ற சூழல் உருவானது.
- இணையத்தில் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற காரணத்தினால் தொழில் உரிமைமையாளர்கள்(Business Owners) தங்கள் பொருட்களை/சேவைகளை சந்தைப்படுத்தும் இடமும்(Marketing Place) இணையமாக மாறி வருகிறது.
இணைய சந்தைப்படுத்தல் முறைகள்: Digital Marketing Methods
இணைய சந்தைப்படுத்தலில் பல்வேறு முறைகள் உள்ளன. தொழிலின் குறிக்கோள் மற்றும் தன்மைக்கேற்ப தேவையான முறைகள் பல்வேறு காலகட்டங்களில் செயல்படுத்தப்படும். அவற்றில் சில:
- தேடுபொறி உகப்பாக்கம் – Search Engine Optimization
- கட்டணத் தேடுபொறிச் சந்தைப்படுத்தல் – Search Engine Marketing
- சமூக வலைத்தள சந்தைப்படுத்தல் – Social Media Marketing
- காணொளி சந்தைப்படுத்தல் – Video Marketing
- உள்ளடக்கம் சந்தைப்படுத்தல் – Content Marketing
- ஆன்லைன் புகழ் மேலாண்மை – Online Reputation Management
- கன்வெர்சன் விகித உகப்பாக்கம் – Conversion Rate Optimization
- மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் – Email Marketing
- உள்ளடக்க தானியக்கம் – Content Automation
- மின்வணிக சந்தைப்படுத்தல் – E-Commerce Marketing
- கைபேசி சந்தைப்படுத்தல் – Mobile Marketing
- மற்றும் பல…
பின்வரும் வலைப்பதிவுகளில் இணைய சந்தைப்படுத்தலின் பல்வேறு முறைகளைப்பற்றி விரிவாக காணலாம்.
தங்களின் கருத்துக்கள் / விமர்சனங்கள் / பரிந்துரைகளை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் பகிருங்கள்.
Nice article bro. Keep it up
Congrats for your new journey. Am waiting for your upcoming updates.! BE SMART!!!
தமிழுக்கு சிறப்பு சேர்த்தமைக்கு நன்றி!
உங்களுடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியது உங்களின் வலைப்பதிவு மூலம் நான் பயனடைந்தேன் மற்றவர்களும் பயன்பெற என் வாழ்த்துக்கள் !
உங்களின் அடுத்த பதிவினை எதிர்நோக்கி ஆவலாக உள்ளேன்…